ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன்.. அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ்..!!
Udayanidhi sent a notice to Annamalai for spreading defamation
திமுக தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெளியிட்டார். Dmk files என்ற பெயரில் வெளியிட்ட அந்த சொத்து பட்டியலுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை தரப்பிலிருந்து வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுக வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் மீது உண்மைக்கு புறம்பான அவதூறுகளை முன் வைத்துள்ளதாகவும், பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு, அதனை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பிரசுரிக்க வேண்டும் எனவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்திரவிட கோரி வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Udayanidhi sent a notice to Annamalai for spreading defamation