யார் உண்மையில் சிவசேனா - உச்சநீதிமன்ற உத்தரவால் கதிகலங்கி நிற்கும் உத்தவ் தாக்கரே! - Seithipunal
Seithipunal


சிவசேனா கட்சியையும் மற்றும் அதன் சின்னமான  'வில் அம்பு' சின்னத்தை உரிமைகோரும் ஏக்நாத் ஷிண்டே அணியின் மனு மீதான விசாரணையை தொடர தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரிய உத்தவ் தாக்கரே அணியின் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுங்கட்சியாக இருந்த சிவேசானாவின் குடும்ப அரசியலை எதிர்த்து, அக்கட்சியில் உள்கட்சி மோதல் உண்டானது. இதில், கட்சி இரண்டாக பிரிய, பெரும்பான்மையான (41) எம்எல்ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணைந்தனர்.

மேலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக ஆதரவு கரம் நீட்டியதுடன், கூட்டணி வைத்து ஆட்சியையும் அமைத்தது. கடந்த ஜூன் மாதம்  30 ஆம் தேதி, ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜக) துணைத் தலைவராகவும் பதவி ஏற்று கொண்டனர்.

இந்நிலையில், சிவேசானா கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி 'தாங்கள் தான் உண்மையான சிவசேனா' என்று அங்கீகரிக்கவும், அக்கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரிய உத்தவ் தாக்கரே அணியின் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav Thackeray Shiv Sena case SC order Eknath Shinde


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->