கோட்டையில் தயாராகும் பெரிய அறை..!! நாளை மறுநாள் பதவி ஏற்பு விழா..!! குதூகலத்தில் திமுகவின் உடன்பிறப்புகள்..!! - Seithipunal
Seithipunal


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வரும் அவர் இரண்டாவது முறையாக இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பிறந்தநாளுக்கு முன்பே அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவின் உடன்பிறப்புகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

டிசம்பர் மாதத்திற்குள் உதயநிதி அமைச்சராகி விடுவார் என பரவலாக பேசப்பட்ட வந்த நிலையில் இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு நான் அமைச்சராவதை முதல்வர்தான் முடிவு செய்வார் என உதயநிதி பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பார் என திமுகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் இரண்டாவது மாடியில் மிகப்பெரிய அறை தற்போது தயாராகி வருகிறது. அதேபோன்று உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் அதே நாளில் நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. மேலும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்க உள்ளதால் அவருடைய நெருங்கிய நட்பு வட்டாரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. மேலும் உதயநிதி அமைச்சராக இருப்பதால் திமுக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் உடன்பிறப்புகளும் குதுகலத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin will become as minister on December14


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->