முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த போகும் திமுகவின் எதிர்காலம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு ஸ்டாலின் வந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாளை முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்ல திட்டமிட்டு இருந்த ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நேற்று சிகிச்சையின் பொழுது நீண்ட தூர பயணம் தவிர்க்குமாறு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த செல்லவுள்ளார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் நாளை மரியாதை செலுத்த உள்ளனர். ஸ்டாலினுக்கு அடுத்த படியாக திமுகவின் எதிர்காலமான உதயநிதி ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi to pay homage at Devar memorial


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->