எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லுவேன்.. யூடர்ன் போட்ட உதயநிதி...!!
Udhayanithi said that he will wish all religions festivals
சென்னை அடுத்த வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நான் எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நான் இப்போது எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் நான் சொல்லுவேன்.
நான் எல்லா மக்களுக்கும் பொதுவானவன். எப்போதும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்க கடமைப்பட்டுள்ளேன்" என பேசியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு "மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று கிறிஸ்தவ பண்டிகைகள் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என பாஜகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாாதத்தை உண்டாக்கியுள்ளது.
English Summary
Udhayanithi said that he will wish all religions festivals