ஸ்ரீமதியின் மரணத்தால், மிகுந்த வேதனையில் உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்.!
udhayanithi tweet about kallakuritchi issue
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அந்த தாய் குற்றம் சாட்டுகிறார். இதுவரை பள்ளி நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பயங்கரமான கலவரம் வெடித்த நிலையில், 'இந்த போராட்டத்தில் நாங்களோ எங்கள் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை.' என்று ஸ்ரீமதி தாய் மற்றும் வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கலவரம் குறித்து திமுக எம்.எல்.ஏ உதயநிதி, "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம். "என்று தெரிவித்துள்ளார்.
English Summary
udhayanithi tweet about kallakuritchi issue