திமுக பைல்ஸ் மற்றும் பிடிஆர் ஆடியோ விவகாரம் - இபிஎஸ்க்கு போட்ட அதிரடி உத்தரவு.!
union minister amitsha order to edapadi palanisamy for dmk files and ptr audio
திமுக பைல்ஸ் மற்றும் பிடிஆர் ஆடியோ விவகாரம் - இபிஎஸ்க்கு போட்ட அதிரடி உத்தரவு.!
சமீபத்தில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை "திமுக பைல்ஸ்" என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதையடுத்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் தான் திமுக கட்சி என்று ஆகிவிட்டது என்று விமர்சித்து, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டார்கள் என்று சரமாரியாக குற்றச் சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்த ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அந்த ஆடியோவில் உள்ள குரல் தன் குரல் அல்ல. அது ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று தெரிவித்து, சபரீசன் என் வழிகாட்டி; உதயநிதி என் நம்பிக்கை; என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .
இதற்கிடையே அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது திமுக பைல்ஸ் மற்றும் பிடிஆர் டேப் 2 குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு விவகாரத்தையும் கையில் எடுத்து அதிமுக தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிடுவது போல் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு விவகாரத்தையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும், விரைவில் இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்றும் பின்னர் சிபிஐ உள்ளே நுழையும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
union minister amitsha order to edapadi palanisamy for dmk files and ptr audio