திமுக வழக்கறிஞர் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பல்.. போலீசார் தீவிர விசாரணை.!
Unknown gang petrol Bomb attack DMK advocate
சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் காரை மறித்து திடீரென கார் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
மேலும் வழக்கறிஞர் ஹரிஹரனை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயற்சித்ததாகவும் ஆனால் லேசான காயங்களுடன் வழக்கறிஞர் ஹரிஹரன் உயிர் தப்பியதாகவுமா கூறப்படுகிறது.
இதனையடுத்து தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக வழக்கறிஞர் ஹரிஹரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Unknown gang petrol Bomb attack DMK advocate