நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இன்று அனைத்துக் கட்சி கூட்டம்-மாநில தேர்தல் ஆணையம்.!
Urban local election all party discussion
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்ட ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மேலும், இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 14ம் தேதிக்குள் நடக்க உள்ளது.
இந்த நிலையில் அதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் கூட்ட அரங்கில் 11:30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Urban local election all party discussion