பாஜகவுக்கு வாக்களிப்பேன் என்று சொன்ன இளம் பெண்ணை கொலை செய்த இண்டி கூட்டணி கட்சியினர்!
Uttar Pradesh young lady killed for BJP vote Samajwadi party members arrested
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிப்பதாக கூறிய இளம் பெண்ணை சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இருவர் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்ஹாலில் கஞ்சாரா நதியின் பாலம் அருகே பட்டிலென இளம் பெண்ணின் உடல் சாக்கு முட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி சேர்ந்த பிரசாந்த் யாதவ் மோகன் கத்தேரியா ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க உள்ளதாக அந்த பெண் கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக இளம் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்து தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Uttar Pradesh young lady killed for BJP vote Samajwadi party members arrested