#சற்றுமுன் || ஐடி ரெய்டு.. பீரோ முழுக்க கட்டுக்கட்டாய் பணம்! பணம் எண்ணும் பணி 2 வது நாளாக தொடர்.!
uttar pradesh it raid in secound day
உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.177 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் தொழிலதிபர் பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில், பான்மசாலா, வாசனை திரவியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் முறைகேடு நடந்துள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சோதனையில் முக்கியமாக, இவரின் தொழிற்சாலையில் போலியான இன்வாய்ஸ்-கள் மூலம் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பியூஸ் ஜெயின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை, பணம் எண்ணும் 4 இயந்திரங்கள் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர் (இன்னும் முடியவில்லை). இதுவரை 177.45 கோடி ரூபாய் ரொக்கம் எண்ணப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
uttar pradesh it raid in secound day