"எழுதாத பேனாவை எங்கு வச்சா என்ன.?" பிரபல கட்சி தலைவர் கிண்டல்.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக் கடலில் ₹.81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார். 

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் பசுமை தீர்ப்பாயம் சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டோரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

இதில், கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் அதை உடைத்து எறிவோம் என்று ஆவேசமாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.

இந்த நிலையில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவரான செல்லமுத்து இது குறித்து, "முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கு நினைவுச்சின்னமாக பேனா வைப்பது தவறே இல்லை. இருப்பினும், திமுக அதை தன்னுடைய சொந்த பணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன.?" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uzhavar Uzhaipalar katchi chellamuthu about Pena Chinnam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->