வைகோ-வை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணச்செய்தி!
Vaiko mourning to pele
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இறங்கல் அறிக்கையில், "கால்பந்து விளையாட்டின் மன்னாதி மன்னனாக உதைபந்து திருவிழாவின் திருமகனாக ஈடு இணையற்ற விளையாட்டு வீரர் உதைபந்து பேரரசர் பிரேசிலைச் சேர்ந்த பீலே உடல்நலம் இன்றி மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் உள்ள என் போன்ற உதைபந்து ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சின்னஞ் சிறுவனாகவே கால்பந்து விளையாட ஆரம்பித்தவர்.
உலகக் கால்பந்துப் போட்டியில் மூன்று முறை பிரேசிலுக்கு சேம்பியன் தகுதி பெற்றுக் கொடுத்த பீலே இறுதி நாட்களில் உடல்நலமின்றி துன்பப்பட்டார் என்ற செய்தி மனதை வருத்துகிறது.
ஆனால் உதைபந்து விளையாட்டு உலகில் இருக்கும்வரை பீலேயின் பெயரும் புகழும் துருவ நட்சத்திரம்போல் பிரகாசிக்கும். பீலே குடும்பத்தினருக்கும், கல்பந்து ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் வாய்க்கோ தெரிவித்துள்ளார்.