பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி - அதிர்ச்சியில் மதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

மேலும், தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில காலமாகவே திராவிடக் கட்சிகளை சேர்ந்த பலர், பாஜகவை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், மதிமுக கட்சித் தலைவர் வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் உள்ளிட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டனர். 

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில், மதிமுக கட்சித் தலைவர் வைகோவின் மருமகன் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko son in law karthikeyan gopalasami joined bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->