முதல்வர் ஏன் பயப்படுகிறார்.? அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கிறோம்.!! - வானதி சீனிவாசன்.!! - Seithipunal
Seithipunal


கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் "திருமண வீடு என்றாலே எதிர்க்கட்சிகளை திட்டுவதற்கான ஒரு இடமாகத்தான் முதல்வர் பயன்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி மீது விமர்சனம் வைத்துவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பார்த்து பிரதமர் மோடிக்கு எரிச்சல், பொறாமை என்று எல்லாம் பேசுகிறார். எனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாங்கள் பயப்பட போவது இல்லை எனவும் பேசுகிறார்.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஏன் அந்த பயம் இப்போது வந்துள்ளது என தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைப்பதற்கு எந்த அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசை கலைக்க என்ன காரணங்களை கூறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதோ. அது எல்லாம் இந்த மாநிலத்தில் நடைபெற்று வருவதாக என்று முதல்வர் நினைக்கிறரா..? எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால் முதல்வருக்கு எதற்காக இந்த திடீர் பயம்  என தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்தை இனிமேல்தான் நடத்த போகிறார்கள். அதற்குள் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு மோடி பயப்படுகிறார் என பேசுவது கற்பனை.

எனவே முதல்வர் மு.க ஸ்டாலின் கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து தமிழக மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும். குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை கதை.

கலாசாரம் பற்றி பண்பாட்டு தளங்கள் பற்றி ஆளுநர் பேசுவது முதல்வருக்கு எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது என தெரியவில்லை. நீங்கள் ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு வேறு யாரும் மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது என்ற எதேச்சதிகார மனநிலைக்கு முதல்வர் சென்று கொண்டிருக்கிறாரா?

அப்போது செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையை சந்திக்காமல் தவிர்ப்பதாகவும் உங்களுக்குள் பிரச்சினை இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "இப்படி வேற கதையை புதுசா உருவாக்கிட்டு இருக்கீங்களா. அதில் உண்மையும் இல்லை. அண்ணாமலைக்கும் எனக்கும் கோவைக்கு வரும் போதும் சரி.. வெளியேயும் சரி.. எந்த பிரச்சினையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக ஒற்றுமையாக கட்சியை வளர்த்து வருகிறோம்" என சிரித்தவாறு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanatha said that Annamalai and me act like sister and brother


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->