திராவிட மாடல் என்றால் வாரிசு அரசியல்.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா நியமனம் செய்தும், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியும் தமிழகம் முதல்வர் மு.க ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கி இருந்தார்.

அதன்படி இன்று காலை 10:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சராக டி.ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.டி ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனிடம் டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவி ஏற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "பாஜகவில் எந்த ஒரு கடைநிலை தொண்டனும் கூட நாட்டின் உயர்ந்த பதவிக்கு வர முடியும். உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம். திராவிடம் மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi said Dravidian model means succession politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->