இறங்கிவந்தா அடிப்பீங்க சார்., நான் வரமாட்டேன் சார்., அடம்பிடித்த முதியவர்., வாணியம்பாடியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி சரக்கு ரயில் கண்டைனர் மீது ஏறி  பயணித்த நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயிலின் கண்டைனர் பெட்டி மீது ஏறிய முதியவர் ஒருவர், நின்றபடியே பயணம் செய்துள்ளார்.

இதனை பார்த்த பயணிகள் உடனடியாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைபாதையில் ரயிலை நிறுத்தினர்.

தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்., பின்னர் அவரைக் கீழே இறங்கி வருமாறு பொதுமக்களும், ரயில்வே துறை போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த நபர் கீழே இறங்காமல் அடம்பிடித்தார். பின்னர் போலீசார் ரயில் பெட்டியின் மீது ஏற முயலவே, அந்த நபரை கீழே இறக்கினர். 

முன்னதாக அந்த நபர், 'நான் கீழே இறங்கினால் நீங்கள் என்னை அடிப்பீர்கள்., நான் இறங்க மாட்டேன்' என்று பரிதாபமாக சொன்னார். பின்னர் 'நாங்கள் உன்னை அடிக்க மாட்டோம், நீ கீழே இறங்கி வா' என்று சொன்னதும் அந்த நபர் இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VANIYAMPADI RAILWAY STATION INCIDENT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->