சனாதனிகளின் அழுத்தத்துக்கு தமிழக அரசு பணிவது சமூகநீதிக்கு எதிரானது - விசிக தரப்பு தோழமை சுட்டல்.! - Seithipunal
Seithipunal


தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பட்டின பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் தெரிவித்தனர்.

பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கி இருப்பதாக கூறினார். 

அதனை தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், விசிக-கவை சேர்ந்த வன்னியரசு தனது டிவிட்டர் பக்கத்தில், "பல்லக்கு தூக்கும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி தந்திருப்பது ஏற்புடையதல்ல! சனாதனிகளின் அழுத்தத்துக்கு பணிவது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

தேவதாசி முறையை ஒழித்தது திராவிட மாடல். உடன்கட்டை ஏறுவதை ஒழித்து விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தது திராவிட அரசியல்! உடன்கட்டை ஏறுவதை ஒழித்து விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தது திராவிட அரசியல்!

உறுதியான சனாதன பல்லக்கு தூக்கும் பட்டினபிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி தந்திருப்பது ஏற்புடையதல்ல!
சனாதனிகளின் அழுத்தத்துக்கு பணிவது சமூகநீதிக்கு எதிரானதாகும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanniyarasu say pattina piravesam issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->