அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திலே இருந்தது - மேயர் பிரியா! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற விமான சாகசத்தை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா கூறுகையில்: தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்களை நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து, ஏற்பாடுகளை செய்தோம்.மாநகராட்சி சார்பில், ஏற்கனவே கடைகள் அகற்றப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றியது.

அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.மயக்கம் ஏற்பட்டது என்பது வெயிலின் தாக்கத்தினால் தான். சம்பவ இடத்தில் நானும் இருந்தேன்," என்று அவர் தெரிவித்தார். 

இந்த சந்தர்ப்பத்தில், பயணிகள் மற்றும் சாகசம் ரசிக்க வந்தவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியிருப்பதன் முக்கியத்துவம் குறித்து மேயர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 ambulances were on the scene for emergency medical assistance Mayor priya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->