5 பேருமே உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, “சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 5 பேருமே உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை.

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு இந்திய விமானப் படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவம் சார்பாக பல்வேறு மருத்துவ குழுக்கள் களத்தில் இருந்தன. அவசர தேவைக்கு 40 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. 1,000க்கணக்கான Para மெட்டிக்கல் குழுக்களும் இருந்தன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக 43 பேர் அனுமதி, வெளி நோயாளிகள் 40 பேர், அந்த 40 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார், இப்போது 2 பேர் உள்நோயாளிகளாக இருக்கிறார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதி, 46 வெளி நோயாளிகள், 2 பேர் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர், இப்போது ஒருவர் உள்நோயாளியாக இருக்கிறார்.

வெளி நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெற்று இரவே வீடு திரும்பிவிட்டார்கள். அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதி, வெளி நோயாளிகள் 7 பேர், இப்போது ஒருவர் உள்நோயாளியாக உள்ளார், 2 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த ஐந்து பேர் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் இது துக்கமான நேரம் அரசியல் செய்வதை தவித்துக் கொள்ளுங்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Marina Air force show 5 people death reason


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->