மல்லுக்கட்டும் திமுகவின் கூட்டணி கட்சிகள்! சைலன்ட் மோடில் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது. சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற ஜோதிமணியும் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசுவும் ஒருவரை ஒருவர் மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நளினி ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு நளினிக்கு இனிப்பு ஊட்டி வரவேற்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதற்கு ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் "ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்ச நீதிமன்றத்தால் நீண்ட காலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனித வெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும் பலி கொண்டு விட்டது. 

குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்கு உயிரானவர்களை பலி கொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஊடகங்களும் சில தனிநபர்களும் கொலையாளிகளை கொண்டாடுவது பெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம். காந்தியைக் கொன்ற கோட்சேவை கொண்டாடுகிற ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கும் இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளை கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? 

கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் குற்றவாளிகளை கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட" என ஜோதிணி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள வன்னி அரசு "காந்தியை கொன்ற கோட்சேவும் அவனது கும்பலும் கொலை செய்ததை நியாயப்படுத்தியும் பெருமை பொங்கவும் அரசியல் செய்கிறது. ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் கைதான யாராவது அப்படி சொல்லி இருக்கிறார்களா? நாங்கள் "அப்பாவிகள் அப்பாவிகள்" எனும் அந்த குரல் கேட்ட பிறகு இப்படி புதுமைப் படுத்துவது நியாயமா தோழர்? என வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார். 

திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரசும் விசிகவும் மல்லுக்கட்டும் நிலையில் அதை கண்டு கொள்ளாது திமுக மௌனம் காக்கிறது. இதேபோன்று உயர்ஜாதி வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிப்பதும் திமுக, விசிக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பதும் கூட்டணிக்குள் ஒரு முரண்பாடை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி சில தினங்களுக்கு முன்பு கூட்டணிக்குள் முரண்பாடு உள்ளதாக பகிரங்கமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முரண்பாடுகள் அதிகமாகி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck and Congress clash in Rajiv killers release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->