நடிகர் ரஞ்சித் மீது விசிக பரபரப்பு புகார் - Seithipunal
Seithipunal


ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஞ்சித் மீது, விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்த்துள்ளார்.

அந்த மனுவில், நடிகரும், இயக்குநருமான ரஞ்சித் சமீபத்தில் நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தின் டிரெய்லரில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்தும் விதத்திலும் பல்வேறு காட்சிகளை வைத்திருந்தார் என்றும், இதனையடுத்து, காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து திரைப்பட தணிக்கை குழுவிடமும் புகார் அளித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு  செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் வகையிலும், அதை ஊக்குவிக்கிற வகையிலும் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vck complaint against actor Ranjith


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->