அம்பேத்கர் சிலைக்கு காவி உடை சர்ச்சை விவகாரம்.. விசிக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்.!
VCK protest against Ambedkar poster issue today
கடந்த டிசம்பர் 6ம் தேதி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்தார்.
மேலும், இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பல லட்சம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அந்த போஸ்டரில் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என பட்டம் வழங்கியதுடன் காவி சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமம் என அம்பேத்கர் படத்தை சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் இந்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கும்பகோணம் நகரத்தில் பல பகுதிகளில் அம்பேத்கரை சித்தரித்து ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது. மேலும் இந்து மக்கள் கட்சியின் அம்பேத்கரை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்து போஸ்டர் ஒட்டிய புகாரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அந்த போஸ்டரை அச்சிட்டதாக கும்பகோணம் உப்புக்கார தெருவில் அச்சகம் நடத்தி வரும் மணிகண்டன் என்பவரை கும்பகோணம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக வீசிக்க திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "திருவள்ளுவர், பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசினார்கள். தற்போது அம்பேத்கருக்கு காவி சாயம் பூசி உள்ளார்கள். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரும் டிசம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
VCK protest against Ambedkar poster issue today