பானை சின்னம் தான் வேணும்.. தேர்தல் ஆணையத்தில் விசிக மனு.!!
Vck request pot symbol for parliament election
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதன் பிறகு இன்றைய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விசிக இடம் பெறவில்லை. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் துணை பொது செயலாளர் பாலாஜி ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மோனாலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vck request pot symbol for parliament election