வெட்கமா இல்லை? திருமாவின் சாதிக் கலவர அரசியல் அம்பலம்!
VCK Thirumalavan caste politics cartoonist Bala
கார்ட்டூனிஸ்ட் பாலா தனது சமூக வலைதள பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நெருங்க நெருங்க தமிழர்களிடம் சாதிச் சண்டை வராதா.. என்று பிணந்திண்ணி கழுகுகளாக திராவிடம் காத்திருப்பது ஒரு பக்கம்..
அதற்கு ஏற்ப வாய்ப்பளிக்கும் முட்டாள் தமிழர்கள் ஒருபக்கம் என தமிழக சூழல்கள் இருக்கின்றன.
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையில் நடந்த சம்பவம் அப்படியானதுதான்.
கடந்த நவம்பர் 1 ம் தேதி மஞ்சக்கொல்லை உடையூர் அருகே சாலையில் அமர்ந்து இளைஞர்கள் குடித்துக் கொண்டிருந்ததாகவும்,
அந்த வழியாக வாகனத்தில் வந்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லத்துரை என்ற இளைஞர் வழிவிடச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
வாகனத்தில் வந்த இளைஞரை குடிகார இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள்.. அதை அந்த குடிகாரர்கள் வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவைப் பார்த்தேன். மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் வந்தது..
தாக்கப்பட்ட இளைஞர் நினைவுத் தப்பிப் போய் கிடைக்கிறார்.. அப்படியும் விடாமல் அடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்கும் எவருக்கும் கோபம் வரும்..
இதனால் மஞ்சக்கொல்லை கிராம மக்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அதற்கேற்ப பாதிக்கப்பட்ட இளைஞருக்காக பாமகவினரும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.
இந்த அரசியல் கட்சிகளால் தானே இவ்வளவு பிரச்சினை என்று கோபத்தில் வெடித்த அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் விசிக மற்றும் பாமக கொடிக்கம்பங்களை கடப்பாரையால் இடித்திருக்கிறார். அது ஒரு தாயின் ஆத்திரம். அதன்பிறகு விசிக ஆட்கள் கூட்டம் போட்டு சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்கள்.
இப்போது இரு தரப்பு ஆட்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாமகவினர் மீது pcr வழக்கு. இதில் pcr வழக்கிற்கான அவசியமான சூழல் இருக்கிறதா..
தனிப்பட்ட இளைஞர்களின் குடிபோதையால் உருவான ஒரு மோதல் தேவையில்லாமல் சமூகச் சிக்கலாக்க மாற்றப் படுகிறது. இந்த பிரச்சினைக்கு, இளைஞர்களிடம் சகஜமாகிப்போன மதுபோதையும் அரசின் சாராய வியாபாரமும் தான் அடிப்படைக் காரணம்.
சாலையில் அமர்ந்து குடித்தால் அந்த வழியாக போகும் எவரும் சத்தம் போடத்தான் செய்வார்கள். உடனே இது திருமா காலம்.. கழுத்தை அறுப்போம் என்று என்றெல்லாம் மேடைப் போட்டு பேசுவது திமிர்த்தனமில்லையா..
திருமா காலம்னா ரோட்டில் உட்கார்ந்து குடிக்கச் சொல்லியிருக்கா என்ன.. ரோட்டில் உட்கார்ந்து படிச்சா உங்களைப் பாராட்டலாம்..
ரோட்டில் உட்கார்ந்து குடிச்சுட்டு திருமா காலம் என்று பேச வெட்கமாக இல்லையா.. இப்படி பேசிய கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை என்ன தெரியுமா.. மூனுமாத சஸ்பெண்ட்.
ஆமா பெரிய ஐ ஏ எஸ் பதவி.. சஸ்பெண்ட் செய்றாங்க.. நியாயமாக சாலையில் அமர்ந்து குடித்ததோடு இல்லாமல் பக்கத்து ஊர் இளைஞனை கொலைவெறியாக தாக்கிய
தங்கள் வீட்டு குடிகார பசங்களை அவர்கள் வீட்டு தாய்மார்களே செருப்பால் அடித்து வெளுத்திருக்க வேண்டும்.
காவல்துறை உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்திருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் அரசு அதைதான் செய்ய வேண்டும்.
தேர்தல் நேரங்களில் தனிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் சமூகச்சிக்கலாக மாற்றுவது தேர்தல் அரசியல்வாதிகளின் வாடிக்கை.
பழைய முரண்களை மறந்து தமிழினம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று பலரும் முயன்று வருகிறார்கள்.. அதைக் கெடுக்கும் வகையில் இதுபோன்ற தனிப்பட்ட நபர்களுக்கிடையில் நடக்கும் போதை மோதல்களை எல்லாம் தேர்தல் அரசியலுக்காக சமூக மோதல்களாக்க துடிக்காதீர்கள் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Thirumalavan caste politics cartoonist Bala