கருணாநிதியை "கட்டுவிரியன்" என்றவர் திருமாவளவன்! 2016 அரசியல் கணக்கு மறந்துடுச்சா? கொந்தளிக்கும் பெண் எழுத்தாளர்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தற்போது நடக்கின்ற திமுக ஆட்சி மன்னர் ஆட்சி என்றும், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் இந்த மன்னர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், பிறப்பால் இன்னொரு முதலமைச்சர் வந்துவிடக் கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இதற்கு திமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் வலுத்த நிலையில், இன்று முதல் ஆறு மாதம் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை திமுக வரவேற்றாலும், பல்வேறு தரப்பிலிருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஷலின் மரியா லாரன்ஸ் என்ற தலித் பெண் எழுத்தாளர் ஒருய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், "மக்கள் நல கூட்டணியில் இருந்த போது கருணாநிதியை "கட்டுவிரியன்" பாம்பு என்று பொதுவில் சொல்லியவர் திருமா. சில வருடங்களுக்கு முன்பு "ஸ்டாலின் அவர்கள் சொல்லித்தான் மக்கள் நல கூட்டணிக்கு சென்றோம், அது ஒரு அரசியல் கணக்கு" என்றார் .

அரசியலுக்கு வந்த புதிதில் தலித் சமூகத்திற்காக உழைத்த தலைவர் இளைய பெருமாளை அவமானப்படுத்தினார் .

இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம் .

ஆகவே திமுகவில் இருந்து வெளியேறினால் மட்டும் விசிக பரிசுத்த கட்சி ஆகி விடுமா? அப்படி ஒரு மாயயை யார் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்?

நேர்மை இல்லாதவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களால் எந்த பயனும் மக்களுக்கு இல்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan DMK Mk Stalin Karunanithi Aadav Arjuna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->