பிரஸ் மீட் இல்லையா? இதற்கு பெயர் தான் Elite அரசியல் - விஜயை போட்டு தாக்கிய விசிக வன்னியரசு!
VCK Vanniyarasu TVK Vijay DMK TN Governor
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ஆளுநரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. ஃபெஞ்சல் புயலுக்கு மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆளுநரை விஜய் சந்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், "ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல்" என்று வன்னியரசு விமர்சித்துள்ளார்.
English Summary
VCK Vanniyarasu TVK Vijay DMK TN Governor