வேங்கைவயல் விவகாரம்: அத்துமீறிய விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இருவர் கைது!  - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்றதாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. 

அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டன.

இந்த வழக்கு 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். 

இதற்க்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளதாக கடந்த 20.01.2025 அன்று சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும், வழங்கி சிபிஐ விசாரணைக்கு மற்ற வேண்டும் என்றும் வேங்கை வேயில் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டு இருந்தன நிலையில், அனுமதி இல்லாமல் கிராமத்துக்குள் நுழைய முயன்றதாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் தற்போது கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vengaivayal issue VCK police Arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->