எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்து! அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு! அரசியலில் பரபரப்பு!
Very harsh opinion about Edappadi Palaniswami Burn the effigy of Annamalai Excitement in politics
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததால் அவரது உருவபொம்மை எரிப்பு. கும்பகோணத்தில் இந்த சம்பவம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. இதோடு அதிமுக கொடியுடன் திரண்ட அதிமுக கட்சி தொண்டர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூகம்பம் வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன.
இதைத் தொடர்ந்து கோபமடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Very harsh opinion about Edappadi Palaniswami Burn the effigy of Annamalai Excitement in politics