காமராஜரால் சிக்கலில் மாட்டிக் கொண்ட விஜய்?...உரிமை கொண்டாடும் செல்பெருந்தகை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது,  நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு வழி வகுத்த பெருந்தலைவர் காமராஜரை எங்களுக்கு வழிகாட்டியாக ஏற்கிறோம் என்றும்,  அம்பேத்கர் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவோர் நடுங்குவார்கள், அவரும் எங்கள் கொள்கை வழிகாட்டி என்று கூறினார்.

மேலும், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் அவர்களையும் எங்கள் வழிக்காட்டியாக ஏற்பதாக தெரிவித்த அவர், பெண் தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக முன்னிறுத்தும் முதல் கட்சி தவெக என்று பெருமிதம் தெரிவித்தார்.

விஜய்யின் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதாவது, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாகவும், பா.ஜ.க.வே காமராஜரை கொண்டாடுவதாக தெரிவித்த அவர், காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை உள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay caught in trouble by kamaraj claiming selperundagai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->