'தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி விஜய் வாழ்க' - உற்சாகத்தில் கோஷமிட்ட விஜய் ரசிகர்கள்.!
Vijay fans video viral on Vijay next cm of TamilNadu
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி விஜய் என உற்சாகத்தில் ரசிகர்கள் கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் ஒரு சில இடங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கே கடும் போட்டி கொடுத்தனர்.
நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது புகைப்படத்தையும், கட்சியின் கொடியை மட்டுமே பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்திற்கு கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம், தனி செயலி என சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள முன்னாள் எம்எ.ல்.ஏ புஸ்ஸி ஆனந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்த விஜய் ரசிகர்கள் 'டாக்டர் தளபதி', 'வருங்கால முதல்வர் தளபதி வாழ்க', துணை முதல்வர் ஆனந்த் வாழ்க' என உற்சாகத்தில் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Vijay fans video viral on Vijay next cm of TamilNadu