விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் - ஜி.கே வாசன்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே மாநாடு வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது வாழ்வில் பெருந்தலைவர் காமராஜரது நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றும் வகையிலே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் சார்பிலே மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay party first political convention congratulations gk vasan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->