விரைவில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்; த.வெ.க அறிவிப்பு..!
Vijay will soon tour all over Tamil Nadu
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். த.வெ.க., கட்சி தலைவரான நடிகர் விஜய், கட்சி தொடங்கியதில் இருந்து வெளியில் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு என விமர்சிக்கப்பட்டது
அவர் கட்சி மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு மற்றும் பரந்துார் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்கச் சென்றது என மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே அவர் வெளியில் சென்று கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்.

இதனால், விஜய் அவர்களை 'வீட்டை விட்டும், அலுவலகத்தை விட்டும் எங்கும் செல்லாமல் அறிக்கை அரசியல் செய்கிறார். ஒர்க் புரம் ஹோம் அரசியல்வாதி' என்ற விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். அவரும் விமர்சனங்களுக்கு ஏற்றபடி வெள்ள நிவாரணம் வழங்குவதை கூட, பாதிக்கப்பட்டவர்களை தன் இடம் வரவழைத்து வழங்கியிருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அக்கட்சியின் கட்சிபொருளாளர் வெங்கட்ராமன், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ''உங்களைப்பார்க்க, உங்கள் இடம் தேடி தலைவர் விஜய் வரப்போகிறார். இன்னும் 02 அல்லது 03 மாதங்களில் தமிழகம் முழுவதும் வரப்போகிறார்.

மக்களோடு மக்களாக, அனைத்து இடங்களுக்கும் வரப்போகிறார்,'' என்று கூறியுள்ளார். இதன் மூலம், கட்சியை பிரபலப்படுத்த விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
English Summary
Vijay will soon tour all over Tamil Nadu