போராட்டத்தில் மக்கள்.. கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.. விஜயகாந்த் வலியுறுத்தல்.!!
vijayakanth statement for bethel nagar
பெத்தேல் நகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
அப்பகுதி மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டு தற்போது அவர்களை காலி செய்ய சொல்வது ஏற்புடையதல்ல. இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெத்தேல் நகர் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
பெத்தேல் நகரில் சுமார் 30 வருடங்காளாக வசித்து வருவதாகவும், அரசு சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்துவிட்டு தற்போது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் முன் வைக்கின்றனர். இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வசித்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
English Summary
vijayakanth statement for bethel nagar