கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது - விக்கிரவாண்டி வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில்,  தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. 

இதில், திமுக வேட்பாளர் சிவா 1,00,177 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும் சுமார் 55 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 45,768 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 8,226 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்த முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திமுக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வெற்றியாக விக்கிரவாண்டி தேர்தல் அமைந்துள்ளது. 

விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து எழ முடியாத அதிமுக, போட்டியிலிருந்து பின்வாங்கியது. 

இந்த வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகம், எழுச்சி, கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. தேர்தலுக்காக அயராது உழைத்த இந்தியா கூட்டணி தலைவர்கள், கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election 2024 MKStalin thanks


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->