விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி திடீரென காலமானதை தொடர்ந்து, விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு ஜூன் 14ஆம் தேதி (நேற்றுமுதல்) வரும் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று  ஜூலை 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு அறிவித்தார். 

இந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்ட போதே 42000 வாக்குகளை பெற்றவர் சி.அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், விக்கிரவாண்டி பகுதி பாமகவின் கோட்டை என்று அறியப்படுவதால், பாமக vs திமுக என்ற இருமுனை போட்டியே என்று களம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election 2024 NDA Alliance PMK Candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->