வெற்றிக்கு பரிசாக மரணத்தை கேக்கும் விக்கிரவாண்டி! " கொடூரம்..வெற்றி பெற்ற இரண்டு திமுக எம்எல்ஏவும் மரணம் " !! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற 4 தேர்தலில் இரண்டாவது இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ இருவரும் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றானது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. சட்டமன்றத் தொகுதி எண் 75 ஆக உள்ளது. விக்கிரவாண்டி சட்டப் மன்ற தொகுதி 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி  விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வருகிறது.

2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் முதல் தேர்தல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி. விக்கிரவாண்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். ராமமூர்த்தி வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி முதல் திமுக எம்.எல்.ஏவும் மரணமும் :

பின்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கே. ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் முதலில் வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ ராதாமணிக்கு வயிற்றுப் புற்று நோய் ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பார்த்துவந்த ராதாமணி 2019 ஆம் ஆண்டு இறந்தார்.

விக்கிரவாண்டி தொகுதி முதல் இடைத்தேர்தல் :

அதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு முதல் இடைத்தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி இரண்டாவது திமுக எம்.எல்.ஏவும் மரணமும்

கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற இரண்டாவது திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மறைந்தார்.

விக்கிரவாண்டி தொகுதி இரண்டாவது இடைத்தேர்தல் :

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குபதிவு நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற இரண்டு திமுக எம்எல்ஏவும் மரணம் அடைந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ இறக்க இடைத்தேர்தல் நடைபெற்று வருவதால் விக்கிரவாண்டி தொகுதி பற்றிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election again


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->