விழுப்புரத்தில் கட்டு காட்டாக கோடிக்கணக்கில் பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்! பின்னணியில் குரோம்பேட்டை புள்ளி!
Villupuram Hawala money
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகியோர் சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்றுக்கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவர்கள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஒருவரிடம் இருந்த இந்த பணத்தை வாங்கி வந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.