விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது பிடிக்கவில்லை!...பிரதமர் மோடி அதிர்ச்சி உரை!...நடந்தது என்ன?
Vinayagar Chaturthi celebration not liked Prime Minister Modi shock speech What happened
பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், கவர்னர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் , திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது என்றும், அந்த பெண்ணின் ஆசிர்வாதம் இது போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம் தான் என் வாழ்வின் மூலதனம் என்று தெரிவித்த அவர், என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன் என்று நெகிழ்ச்சி அடைந்தார்.
மேலும்,விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறிய அவர், இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்வதாகவும், அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
English Summary
Vinayagar Chaturthi celebration not liked Prime Minister Modi shock speech What happened