தவெக மாநாட்டில் எல்லை மீறும் தொண்டர்கள்!....உடனடியாக பவுன்சர்கள் செய்த அதிரடி சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகளுடன் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.,

மாநாட்டிற்கு அதிக கூட்டம் கூடுவார்கள் என்பதால், காலை 10 மணிக்கே மாநாட்டு திடல் திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள விஐபி சேர்கள் மற்றும் மகளிருக்கான இருக்கைகளை ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து, தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Volunteers who cross the border in tvk conference immediately the action of the bouncers


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->