பாகிஸ்தானின் அரசியலில் திடீர் திருப்பம்.. சற்று நிம்மதியில் இம்ரான் கான்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், சனிக்கிழமை (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்து விடும். 

இம்ரான் கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம். கி.எம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம். கி.எம் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கானின் அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.  இம்ரான் கானின் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது. எதிர்கட்சியின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். இம்ரான்கான் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் யாரும் நாடாளுமன்றம் வரவில்லை. இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote of confidence in the pakistan parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->