தேர்தல் ஆணையத்திற்கு எந்தப் புகாரும் வரவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி! - Seithipunal
Seithipunal


இன்று காலை 8 மணி முதல் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தமிழகத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழகத்தில் காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகே இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த இயந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டு இருந்தால் மட்டும் அதில் பதிவான வாக்குகளை வாக்கு எண்ணும் அலுவலர்கள் எண்ண முயற்சிப்பார்கள்.

இல்லையென்றால் அந்த இயந்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த இயந்திரங்களை எண்ணுவார்கள். இறுதியில் பதிவான வாக்குகளில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அந்த ஒதுக்கப்பட்ட இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபாட் பதிவுகள் கணக்கில் கொள்ளப்படும்.

தபால் வாக்குகளில் பிரச்சினை இருந்தால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தான் முடிவெடுப்பார்கள். இதுவரை எந்த புகாரும் அரசியல் கட்சிகளிடம் இருந்து வரவில்லை. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின் தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து விவரங்களையும் குடியரசுத் தலைவரிடம் அளிப்பார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" என்றும் சத்யப்ரதா சாஹு கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We Did not Any Complaint Tamilnadu State Election Comission


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->