'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும்; தமிழக முதல்வர் பேச்சு..!
We should oppose the One Nation One Election Act till the end
மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று மு.க. சட்டத்துறை சார்பில் 03-வது மாநில மாநாடு செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, "பா.ஜ.க.வின் செயல்திட்டம் பெரும்பாலும் குறுகியகால செயல்திட்டமாக இருக்காது, நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது ஒற்றை ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இது தனி மனிதர் ஒருவரிம் அதிகாரத்தை கொண்டு போய் சேர்க்கும். பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட இது நல்லதல்ல.
இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் பயன்படும்.பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கக் கூடிய வலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், அவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கோரிக்கை வைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், பா.ஜ.க.வை ஆதரிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்தியாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கருத்தியலுக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற சட்டத்துறை சார்பில் 03-வது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
We should oppose the One Nation One Election Act till the end