வி. கே. பாண்டியனை ஒடிசாவை விட்டுத் துரத்துவோம்..! அஸ்ஸாம் முதல்வர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து ஜூன் 1ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒடிசாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியிருப்பதாவது, " ஒடிசாவில் ஏறக்குறைய பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

இதுவரை நடந்த 3 கட்ட வாக்குப்பதிவில் பாஜக மெஜாரிட்டியை பெற்றுள்ளதாக நான் கணிக்கிறேன். 4ம் கட்ட வாக்குப்பதிவில் மேலும் சில இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியமைப்பது உறுதி. எனவே ஜூன் 10ம் தேதி பாஜக ஆட்சியமைக்கும். 

அதன்பின்னர் நவீன் பட்நாயக்கின் வலதுகையாக இருந்து ஆட்சியில் அதிகாரம் செலுத்திவரும் வி. கே. பாண்டியனை தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்புவோம். இவரிடமிருந்து ஒடிசாவையும், நவீன் பட்நாயக்கையும் மீட்போம்" என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We will send out Pandiyan to Tamilnadu Assam CM speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->