34% முஸ்லிம்கள் இருக்கோம்! நாங்க கட்டுவோம் பாபர் மசூதி - இண்டி கூட்டணி எம்எல்ஏ சர்ச்சை அறிவிப்பு!
West bengal Babar Marjit TMC MLA Announced
மேற்கு வங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என, திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்காவில் டிசம்பர் 6, 2025 முதல் இந்த மசூதி கட்டப்படத் துவங்கும் என்றும் திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் தனது அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதியை கட்டுவதற்காக நிலம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தரபிரதேச அரசு ஒதுக்கிய நிலத்தில் இன்னும் பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில், பாபர் மசூதி பெல்தங்காவில் கட்டப்பட வேண்டும் என திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்து உள்ளார்.
மேலும், "மேற்கு வங்கத்தில் 34% முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வாழ வேண்டும். பெல்தங்காவில் 2 ஏக்கர் நிலத்தில் மசூதியின் பணிகள் துவங்கும். இதற்காக நான் ரூ.1 கோடி நன்கொடை அளிக்கத் தயாராக உள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 100 பேர் கொண்ட அறக்கட்டளை அமைத்து மசூதியை நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹுமாயூன் 2011 முதல் பரத்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்.
English Summary
West bengal Babar Marjit TMC MLA Announced