தேர்தலில் தனித்துப் போட்டி.. மம்தாவை சாடும் மாநில காங்கிரஸ்..!! பற்றி எரியும் இண்டி கூட்டணி.!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் கூட்டணியை முடித்துக் கொள்வதாக அறிவித்த மம்தா பானர்ஜி சமாதானப்படுத்த காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மம்தாவுடன் சமூக தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி தொடர்பான மம்தாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என கூறியுள்ள அவர் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் மம்தா பானர்ஜி எனவும் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் கருத்து வேறுபாடு வருவது சகஜம் தான், அதை பேசி தீர்த்துக் கொள்வோம். மம்தா ஒருபோதும் பாஜகவை ஆதரிக்க மாட்டார். அதில் அவர் உறுதியாக இருப்பார். மேற்கு வங்க காங்கிரஸ் மம்தாவை கடுமையாக  விமர்சனம் செய்து வருகிறது. 2011ல் மம்தா முதல்வரானது காங்கிரஸ் தயவால் தான் எனவும், மம்தா காங்கிரசுக்கு துரோகம் செய்வதாகவும் குற்றம் சட்டி வருகிறது என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal congress criticized mamta banerjee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->