அமெரிக்காவின் ரூ.182 கோடி குறித்து ஜெய்சங்கர் கூறியது என்ன?
What did Jai shankar say about the US s Rs182 crore
இந்தியாவில் USAID அமைப்பு மூலம் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் 21 மில்லியன் டாலர்கள்,அதாவது இந்திய மதிப்பில் ரூ.182 கோடி வழங்கி வருவதாகக் கூறப்படும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்தது.அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும், யாரையோ தேர்தலில் வெற்றிப் பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்த பாஜக, காங்கிரசை விமர்சித்து வருவதுடன் இது தொடர்பான விசாரணைத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 2010-2012 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி, அமெரிக்காவிடம் நிதி பெரும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என மறுத்துள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கர்:
இந்நிலையில் நேற்று, டெல்லிப் பல்கலைக்கழக SRCC இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, " நிர்வாகத்தினர் வெளியிடப்பட்ட சில தகவல் கவலைக்குரியது.ஒரு அரசாங்கமாக நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் என்று நான் கருதுகிறேன். USAID இங்கு நல்லெண்ணத்துடன், நடவடிக்கைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து தீய நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது நிச்சயம் கவலை அளிக்கிறது. அதில் ஏதாவது இருந்தால், அதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாடு சில தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் " என்று தெரிவித்திருந்தார்.
English Summary
What did Jai shankar say about the US s Rs182 crore