முன்னால் முதல்வர் கருணாநிதி பாடல் வரிகளால் துவங்கப்பட்ட அண்ணாமலை நிகழ்ச்சி.! மக்கள் மத்தியில் சலசலப்பு - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் அதனை தமிழ்நாடு முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்ய  தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். சமீபகாலமாகவே பாஜக தலைவர் அண்ணாமலை பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

ரபேல் வாட்ச் விவகாரம் தொடங்கி பல்வேறு விதமான பிரச்சினைகளிலும்  சிக்கி வந்திருக்கிறார். அவர் மேலும் நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிரான புகாரை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியின் நேரலையை தொடங்கி வைக்க வந்த அண்ணாமலை வருவதற்கு முன்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் எழுதிய செம்மொழியான தமிழ் மொழி என்ற பாடல் ஒளிபரப்பானது. இதனால் நிகழ்ச்சி அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happened at the Annamalai festival after kalainjar song played


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->