இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் என்ன ஆனது? வெளியான தகவல்.!
What happened Innova Crysta diesel variant
இந்தியாவில் டொயோட்டா விற்பனையாளர்கள், இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை திடீரென நிறுத்துவதாக அறிவித்தன.
இதையடுத்து டொயோட்டா நிறுவனம், தனது அதிக பிரபலமான எம்பிவி மாடலை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்தது.
இந்நிலையில், இதுகுறித்து டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கையில், "வாடிக்கையாளர் நலன் சார்ந்த நிறுவனமாக தொடர்ந்து வாகன வினியோகத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும்". என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு மாற்றாக ஹைப்ரிட் மாடல் ஒன்று இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இன்னோவா கடந்த ஆண்டுகளில் பலமுறை அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
What happened Innova Crysta diesel variant