ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆனது? கண்பார்வை? மருத்துவர்களின் 3 வருட காலக்கெடு? உளவாளியால் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் பாதிப்பால், கண் பார்வை இழந்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

மேலும் இன்னும் மூன்று ஆண்டுகள் தான் ரஷ்ய அதிபர் புதின் உயிருடன் இருப்பார் என்றும் மருத்துவர்கள் காலக்கெடு விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக முன்னாள் ரஷ்ய உளவாளி ஒருவருக்கு, ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து, ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதில், ரஷ்ய அதிபர் புதின் கடுமையான தலைவலியால் அவதிப்படுவதாகவும், அவருடைய கண்பார்வை மோசமாகி வருவதாகவும், மருத்துவர்கள் அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்த உண்மை தன்மை இன்னும் ஆராயப்படவில்லை. இது அதிகாரப்பூர்வ செய்தியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போர் நடந்து வரும் சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் இன்னும் மூன்று ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பார் என்ற ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happened to Russian President Putin deadline for doctors Sensational information released by a spy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->